Wednesday, May 22, 2013

பாரதீ



பாரதி – பரவட்டும் தீ
கவிதை கார்மேகங்கள்
உன்
சுவடிகளில் தான்
மழையாக
பெய்துகொண்டிருக்கின்றன.

சூரியனும் சந்திரனும்
உனது
கவிதைகளில் தான்
வெளிச்சத்தை
பெற்றுக்கொண்டிருக்கின்றன

மலைகளில்
அடர்ந்த காடுகளில் வீசுகின்ற
தென்றல் காற்றாக…
உனது கவிதைகள்
எங்கள் மனதில்
வீசிக்கொண்டிருக்கின்றன

நேற்று
இன்று
நாளை
சரித்திரத்தின்
அனைத்துப்பக்கங்களிலும்
உனது
கவிதைச்சுவடுகள்

நாட்டு விடுதலைக்கும்
பெண் விடுதலைக்கும்
உனது
கவிதைகள் தான்
புரட்சி நெருப்பை
புவி எங்கும்
பற்ற வைத்தது

பனிக்காலத்தில்
போர்வைகளைத் தேடும்
விரல்களைப் போல…
புதுமை என்றவுடன்
உனது கவிதைகளைத்
தேடுகின்றன…
கண்கள்

உன்னைப்பற்றி
எழுதும் பொழுதுதான்
புரட்சியும்
புதுமையும்
எனது வார்த்தைகளில்
கவிதைகளாக
வந்து விழுகின்றன

மாகவியே
நீ
காலத்தை வென்றவன்
காலனுக்கே
காலனாய்
நின்றவன்…

No comments: