பெண்
பெண்மையே
உலக அதிசயங்களின்
உண்மையே…
தாய்
உள்ளம் படைத்த
மென்மையே…
பிற உயிர்களுக்கு
இயன்ற வரை கிடைக்கும்
நன்மையே…
பற்பல கலகங்களை
தகர்த்தெறியும்
திண்மையே…
மானுடத்தில்
மனிதர்களை வளப்படுத்தும்
மகிமையே…
எள்ளல் நிறைந்த வாழ்வில்
எம்மை நிலை நிறுத்தும்
எளிமையே…
எமன் எதிரே நின்றாலும்
எம்மை நிலைநிறுத்தும்
வலிமையே…
எம்மை சான்றோனாய்
பூமிதனில் நிலைநிறுத்திய
பெருமையே…
இறைவனாய்
உயிர்களைப் படைத்தருளும்
தாய்மையே…
தெய்வங்களின்
தன்மையே…
வாய்மையே…
No comments:
Post a Comment