Thursday, March 31, 2011

காதல்------------மாமதயானை

அதிசயப்பட்டே தீர வேண்டும்
உலக அதிசயத்தைப் பார்த்து
எங்களூர் அதிசயம்
வாய்ப் பிளந்து நிற்பது
அதிசயம் தானே...
.............................

சதாசர்வ காலமும்
உன்னை
அலங்கரித்துக் கொண்டே
இருக்கிறாய்...

இயற்கையாகவே-நீ
அழகின்
அமுதசுரபி என்ற
அரிய உண்மையை
அறியாதவளாய்
..............................
நீ
சொல்ல நினைப்பதை
உனக்கு முன்னர்
சொல்லிவிடுவதிலேயே
தெரியவில்லையா....
நான்
உன்னை காதலிப்பது
...............................
நிறைய பேசுகிறாய்
நிறைய எழுதுகிறாய்
நிறைய சிந்திக்கிறாய்
அனைத்தும்
நிறைவாகவே
நிறைந்திருக்கும்
உன்னிடத்தில்
எப்படி இல்லாமல் போனது....
காதல்???????????????????????
...................................

உன்னை பற்றி
அதிகம் தெரிந்த
எனக்குதான்.........
என்னைப் பற்றி
எதுவும் தெரியாது
...................................

No comments: