Tuesday, March 29, 2011

மாமதயானை-சென்ரியு கவிதைகள்

புரட்சி மாநாடு
வாருங்கள் வாருங்கள்....
கோழி பிரியாணி

நண்பன் வருவதாயிருந்த
கடைசி இரயிலில்.....
வந்தது ஏமாற்றம்

தேர்வு பயம்
இரவு முழுக்கப் படித்தான்....
கந்த சஷ்டி கவசம்

பூவா? தலையா?
பூ கேட்கிறாள்....
விதவை

அன்னையும் பிதாவும்
படித்துக்கொண்டிருக்கிறது.....
அனாதைக்குழந்தை


நோயாளிக்கு
ஆயுள் கெட்டி...
மருத்துவர் மரணம்


நன்றியுள்ள நாய்
வாலை ஆட்டியது.....
திருடனுக்கு

எல்லையில் இராணுவ வீரன்
மனதில்.....
மனைவியின் ஞாபகம்

வாயுள்ள பிள்ளை
பிழைத்துக்கொள்ளும்....
அம்மா தாயே


சூரியன் உதித்தும்
பலனில்லை.....
இருண்ட உள்ளங்கள்

மாலையுடன் இருந்தாலும்
இரசிக்க முடியவில்லை
பிணமாக தாத்தா

மண்டியிட்டுக்கேட்கிறேன்
மரணமே இரக்கப்படு.....
பச்சிளம் குழந்தை

நீண்ட கூந்தல் பெண்
எழுதிக்கொண்டிருக்கிறாள்....
மொட்டைக்கடுதாசி

முள் குத்திய வலியிலும்
மறக்க முடியவில்லை.....
தொலைந்த செருப்பின் ஞாபகம்

No comments: