Saturday, February 6, 2010

இணைய வரலாறு


இணைய வரலாறு
-வே.மணிகண்டன்
(நான் புதுவைப்பல்கலை கழகத்தில் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் முனைவர் பட்ட
ஆய்வாளனாக இணையத்தமிழ் இதழ்களில் நவீன இலக்கியப்போக்குகள் எனும் தலைப்பில் திண்ணை,பதிவுகள்,வார்ப்பு,நிலாச்சாரல் ஆகிய இணையத்தமிழ் இதழ்களின் படைப்புகளை
ஆய்வு செய்கிறேன் தங்களிடம் என் ஆய்வு தொடர்பான தரவுகள் இருப்பின் தந்து உதவுமாறு
கேட்டுக்கொள்கிறேன்.இந்த ஆய்வுக்கட்டிரையில் எதேனும் தவறிருந்தால் தெரியப்படுத்தும்படி
தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் தொடர்புக்கு: கைப்பேசி எண்:9025240926
மின் அஞ்சல் முகவரி: manisen37@yahoo.com)

இணையம்:

உலகளாவிய அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டு இணைப்புகளான மாபெரும் வலையமைப்பே இணையம் (Internet). இணையம் என்ற சொல்லுக்கு உலகெங்கிலும் உள்ள கணினி வலையமைப்புகளின் தொடர்புப் பிணைப்பு; உலகலாவிய தகவல் பரிமாற்றத்திற்கு இப்பிணைப்பு வகைசெய்கின்றது என விக்கிசார் திறந்த அகரமுதலியான விக்சனரி சொற்பொருள் விளக்கம் தருகிறது. ஒளிநார் இழைகளினாலும், செப்புக்கம்பிகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினிவலைகளின் கூட்டு இணைப்பான இணையத்திலிருந்து செய்திப் பறிமாற்றமானது முன்னும் பின்னும் அடையாளம் சேர்க்கப்பட்ட செய்தித்தொடர்களாக இணையத்தில் வெளி வர செய்யப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுகிறது.
இணைய வரலாறு:
சோவியத்யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விண்ணில் முதலில் செயற்கைகோள் ஏவுதல் தொடர்பாகவும்,நிலவுக்குமனிதனை அனுப்புதல் தொடர்பாகவும் கடும்போட்டிநிலவியது.இப்போட்டியில் சோவியத் யூனியன் 1957ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி "Sputnik" என்ற முதல் செயற்கை கோளை விண்ணுக்கு ஏவியது.இச்செயற்கை கோள் வெவ்வேறு இடங்களுக்கு உடனுக்குடன் தொடர்பு கொள்வதற்கான செயற்கைக்கோள் சார்ந்த தொலைத்தொடர்புவலை அமைப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ந்த அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை அறிவியல் துறையிலும்,இராணுவத்துறையிலும் சோவியத்யூனியனைவிட தனது மேலாண்மையை மேம்படுத்த வேண்டிய காட்டாய நிலைக்கு உள்ளானது.
சோவியத்யூனியனுக்கு போட்டியாக அமெரிக்கா ARPA NET என்ற பெயரில் அழைக்கப்படும் மேம்பாட்டு ஆய்வுத்திட்ட முகவாண்மை வலையகம்(AdvancedResearcProject Agency-ARPANET) எனும் இராணுவ ஆய்வு நிறுவனத்தை ஆரம்பித்தனர். இந்த ஆய்வு நிறுவனம் வான் வழித்தாக்குதல்களை எதிர் கொள்வதற்கும், அமெரிக்க இராணுவ மையங்களுக்கு இடையே வலைத்தொடர்பைத் தொடங்குவதற்கும் தொடங்கப்பட்டது. எதேனும் அமெரிக்க இராணுவ மையம் தாக்கப்பட்டு அந்த மையத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் பிற மையங்களுக்கு எந்த விதப்பதிப்பும் இன்றி தகவல் தொடர்பு கிடைக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டது.முழுக்க முழுக்க அமெரிக்க இராணுவத்தின் தேவைக்காகவே முதலில் ARPANET உருவாக்கப்பட்டது.

ARPANET கணினிகளை இணைப்பதற்கான வரையறைகளையும்,கோட்பாடுகளையும் வடிவமைத்தது, நெடுந்தூரக் கணினிகளை தொலைபேசிக்கம்பிகள் வழியாக இணைப்பதற்கான வழிமுறைகளை நீண்டஆராய்ச்சியின் முடிவாக 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் Advanced Research Project Agency தனது ARPANET என்னும் கணினி வலையமைப்பினை அரசின் கவனத்தற்கு கொண்டுவந்தது.
1969ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம்தேதி ARPANET இணைப்பானது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக கணிணியில் இருந்து ஸ்டன்ஃபோர்ட் ஆய்வு நிறுவனக் கணிணியுடன் வெற்றிகாரமாக இணைக்கப்பட்டது. log-in என்ற சொல்லே முதலில் அனுப்பிவைக்கப்பட்ட செய்தியாகும். 1969 டிசம்பர் 5 இல் ஆர்பாநெட்டுடன் கூடுதலாக மேலும் இரண்டு அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டன.
1971 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தை சேர்ந்த பொறியாளர் Tomlinson கணினி வலை அமைப்பை கொண்டு மின்னஞ்சல் வழியாக செய்தி அனுப்பும் முறையையும்,பயனர் பெயருக்கும்,Domain பெயருக்கும் இடையே “@” எனும் குறியீட்டையும் கண்டறிந்தார்.பொதுமக்களுக்கு முதல் முறையாக 1972ஆம் ஆண்டு ARPANET வலையமைப்பு இயக்கிகாட்டப்பட்டது ,இதே ஆண்டில் அமெரிக்காவின் இருபத்திமூன்று பல்கலைகழகங்கள் ஆர்பா நெட்டுடன் இணைக்கப்பட்டன.
அமெரிக்காவிற்கு மட்டுமே சொந்தமாயிருந்த ARPANET உடன் ஐக்கியகுடியரசு, நோர்வே ஆகியநாடுகளும் தங்களை இணைத்துக்கொண்டன . ARPANET என்று 1971 ஆம் ஆண்டு வரை அழைக்கப்பட்ட வலையமைப்பு 1972 ஆம் ஆண்டு முதல் DARPA NET(Defence Advanced Research Projects Agency )என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
அமெரிக்க கணினித் துறை நிபுணர்களான Vinton Cerf ,Bob kahn ஆகிய அறிஞர்களால்1974 ஆம் ஆம் ஆண்டு இணைய விதிமுறை இலக்கம் (The Internet and Transmission Control Protocols )வடிவமைக்கப்பட்டது. CompuServe எனும் நிறுவனம் இணையத்தில் கட்டணம் செலுத்தி தரவுகளைப் படிக்ககூடிய பயனருக்கான online சேவையை அறிமுகப்படுத்தியது.
இணையம் வழியே உரையாடும் சேவை(Chat) 1980 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த்கப்பட்டது. இணையத்தளங்களுக்கு ".com".".gov" , “.net”, ".edu" எனும் Domain Name 1983 ஆம் ஆண்டுஅறிமுகப் படுத்தப்பட்டன.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்த ARPANET வலையமைப்பு 1990 ஆம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தையும் இணைத்துக்கொண்டு அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு internet(இணையம்)எனும் பெயரில் சேவையைத் தொடங்கியது.
1991ஆம் ஆண்டு இணைய அறிஞர் Tim Berners-Lee தனது இணைய ஆராய்ச்சியின் மூலம் கணிணிகள் பேசும் இணையமொழியான மீயுரைக்குறிமுறையையும்(HTML),W W W (World Wide Web) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வையக விரிவு வலையை அறிமுகப்படுத்தினார்.
1992 ஆம் ஆண்டு இணைய சமூக அமைப்பு (IS O C) உருவாக்கப்பட்டது,மேலும் ஒரு மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றதும் பதிவானது. 1993 ஆம் ஆண்டு இணைய வானொலியும் ,இணையதள பேசு மொழிமாற்ற அமுலாக்கியும்(http) அறிமுகப்படுத்தப்பட்டது,இதே ஆண்டில் Mosaic எனும் முதல் இணையத்தள இயங்கியை Marc Andreessen என்பவர் அறிமுகப்படுத்தினார்.
1994ஆம் ஆண்டு David Filo ,Jerry Yang ஆகிய இணைய அறிஞர்களால் Yahoo நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.மேலும் Am ason,net scape ஆகிய தளங்களும், Mosaic இல் பணிபுரிந்த Jim clark,Mark Andreessen ஆகியோரின் முயற்சியால்1994 ஆம் ஆண்டு Netscape என்னும் இணைய இயக்கியும் வியாபார நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு internet explorer,mozilla ஆகிய இணைய இயக்கிகளும் தோற்றுவிக்கப்பட்டது.
Stanford பல்கலைக்கழக ஆய்வுமாணவர்களான Larry Page ,Sergey Brin ஆகியோர் இணைந்து 1996 ஆம் ஆண்டு Google தேடுதள நிறுவனத்தை தோற்றுவித்தனர்.1997 ஆம் ஆண்டில் தொடுப்பில்லா தொடர்பு (wap)அறிமுகப்படுத்தப்பட்டது.
blog (வலைப்பதிவு) எனும்சொல் நடைமுறைக்கு 1999 ஆம் ஆண்டு வந்தது.2000 ஆண்டில் உலக இணையத்தளங்கள் இணைய உடைப்பு கும்பலின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட வருடமானது.2001 ஆம் ஆண்டு கட்டற்ற இணைய களஞ்சியமான wikipidiya தோற்றுவிக்கப்பட்டது மேலும் செய்திகளைப் பறிமாறும் மின் அஞ்சல்கள்(E-MAIL) வைரஸ் தாக்குதலுக்கு உட்பட்ட சோதனை மிகுந்த வருடமானது. 2005 இணையத்தில் வழியே வீடியோ காட்சிகளைப் பகிர்ந்து கொள்ளும் YouTube சேவை அறிமுகமாகியது.
2004ஆம் ஆண்டில் Mark Zuckerberg எனும் ஹாவாட் பல்கலைக் கழக மாணவனால் thefacebook.com உருவாக்கப்பட்டது,மேலும் இந்த ஆண்டில்தான் fire fox எனும் இணைய இயக்கி அறிமுகப்படுத்தப்பட்டது.2005 ஆம் ஆண்டில் படக்காட்சி(video) இணையத்தளமான youtupe இணையத்தில் உருப்பெற்றது.2001 ஆண்டில் உருவாக்கப்பட்ட விக்கிபீடியா எனும் கற்றற்ற இணைய தகவல் களஞ்சியத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை 2006 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் இலக்கை அடைந்தது.உலகில் மொத்தம் 85,541,226 இணையத்தளங்கள் உள்ளதாக 2006ஆம் ஆண்டின் இணையத்தள கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது.
2007 ஆம் ஆண்டில் அதி வேக கம்பியில்லா இணையத்தை Apple நிறுவனம் Iphone எனும் கையடக்கத் தொலைபேசியை வெளியிட்டது.

துணை இணையத்தளப் பட்டியல்:

http://www.net.thetamil.net/
http://ta.wiktionary.org
http://forum.padukai.com
http//www.astro.com
http://www ezilnila.com
http://www ta.wikipedia.org
http://www.livinginternet.com
http://www tamilweb.do.am
http://www.netvalley.com

துணை வலைப்பதிவு பட்டியல்:

http://yarlossai.blogspot.com
http//mahanathi.blogspot.com
http//itvalam.blogspot.com

ஆய்வு கட்டுரை முழுமை பெறவில்லை

1 comment:

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in