Tuesday, January 6, 2009

மாமதயானை

கேளிக்கை

ஒரு பிச்சைக்காரன் பைத்தியமாகிறான் ।அவன்பைத்தியக்கார மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான் அவன் மீது அன்பு செலுத்திய பெண்மருத்துவரையே தன் மகிழ்ச்சியின் எல்லைக்கோடாக நினைத்துக்கொண்டான் .அவள் பணிமாற்றம் செய்யப்பட்டாள் .அவளிருந்த இடத்தில் அவள் தங்கை.இவன் கண்டான்.கண்டவுடன் பிறந்தது இப்பாடல்.

பாடல்: பார்த்த முதல் நாளே
படம் : வேட்டையாடு விளையாடு

சேர்ந்த முதல் நாளே டாக்டர் சேர்ந்த முதல் நாளே
ஊசி வலிக்கலையே டாக்டர் மாத்திரை கசக்கலையே
என் அருகே வந்து நீ சிரித்தாய்
வெள்ளி அருணாகொடியை ஏன் அறுத்தாய்
உன் அக்காவைப்போல நீயும் பிகரே
என்றும் மறவேனே

வேட்டி அவிழ்கிறதே டாக்டர் வேட்டி அவிழ்கிறதே
டவுசர் தெரிகிறதே டாக்டர் டவுசர் தெரிகிறதே
என் டவுசரில் இல்லை சொக்காவே
சோக்காய் இருப்பவள் உன் அக்காவே
அவள் சிந்திய சளியில் நனைந்தபின் நனைந்தபின்
நானும் சளியானேன்

காலை எழுந்ததும் திருவோடு எந்தி
தெருவொடு போவதும் சுகமே
மாலை முழுவதும் மாலைக்கண் நோயில்
மாட்டித் தவிப்பதும் தவமே

நீ வந்துகொடுக்கும் மருந்தெல்லாம் கூட
விருந்தாக இனிப்பது வியப்பே
கனிவாக நீ பேசி கரண்ட் ஷாக்கு கொடுத்தாலும்
கலையாது கனவில் உன் முகமே

தயிர்சட்டி பால்சட்டி மோர்சட்டி அதுவல்ல
கரிச்சட்டி தான் உந்தன் இடுப்பு
கிளிப்பச்சை சளிப்பச்சை எலிப்பச்சை நானல்ல
தெருப்பிச்சை தான் எந்தன் பொழப்பு
{வேட்டி அவிழ்கிறதே}
குண்டான் சோற்றில் நீ குழம்பை ஊற்றினால்
குழம்பாமல் அதைக் கண்டு ரசிப்பேன்
சோற்றைத் தின்றுவிட்டு குண்டானைக் கொடுத்தால்
அனகோண்டா என்று உனை நினைப்பேன்

யாரும் இல்லாத மந்தை வெளியிலே
மொந்தைக்கள் குடித்திட வேண்டும்
நீயும் நானும் அங்கே போடும் சண்டையில்
என் கடவாய்ப்பல் உடைந்திட வேண்டும்

பிறர் எச்சை வாங்கித் தின்கின்ற பொழுது
பாயாசம் பாய்சன் போல் இருக்கும்
உன் எச்சை வாங்கித் தின்கின்ற பொழுது
மெதுவாகக் கடவாய்ப்பல் வலிக்கும்
மெதுவாகக் கடவாய்ப்பல் வலிக்கும்
{வேட்டி அவிழ்கிறதே}
மாமதயானை
புதுச்சேரி


மின்னஞ்சல் முகவரி:manisen37@yahoo।com
வலைப்பதிவு முகவரி:sengodi550.blogspot.com
கைப்பேசி எண் :9786853956

No comments: