Saturday, November 1, 2008

காதல்,மாமதயானை

மாமதயானை – காதல் கவிதைகள்

உன்
அழுகையைக்கூட
அதிசயித்தே
பார்க்கும் என் காதல்

என்
தோளில் சாய்ந்து
சிரித்துக்கொண்டிருக்கிறது
இவ்வுலகின்
அதிஅற்புதமான
கவிதை

என்னை
காதல் தேவதை
ஆசிர்வதிக்க
தொடங்கிவிட்டாள் என்ற
உண்மையை
நீ
கடைக்கண்களால்
பார்த்த பிறகுமா
அறியாமல் இருப்பேன்

ஆயிரம் அர்த்தங்களை
என்னுள்
தோற்றுவிக்கவே
நீ
அர்த்தமில்லாது
சிரிக்கிறாயோ…

என்னைத்தொலைக்கவே
உன்னை
தேடிக்கொண்டிருக்கிறேன்

உனக்கு
ஒரு ரோஜா தோட்டத்தையே
பரிசளிக்க ஆசைப்படுகிறது
இந்த ஏழையின் மனம்
ஒற்றை ரோஜா வாங்க
வசதியில்லாத நிலையிலும்…

என்
மரணத்திற்கு
பிறகும்
உன்னையே
சுற்றிக்கொண்டிருக்கும்
என் ஆன்மா
என்னைப்போலவே

மழைக்காலங்களில்
உனக்கு
குடைவாங்கித்தர பிரியப்படுகிறது
என்மனசு
ஆனால்
எப்பொழுதும்போலவே
மழையில்
நனையவே
பிரியப்படுகிறது
உன் மனசு

உன் முகத்தை
நேருக்கு நேராய்
பார்க்கும் தைரியம்
முன்பே
எனக்கு வாய்த்திருந்தால்…
எப்பொழுதோ
உனக்கு
கணவனாயிருப்பேன்

No comments: