Tuesday, October 28, 2008

காதல் கவிதைகள்-மாமதயானை

இப்பொழுது நினைத்தாலும்
சிரிப்புதான் வருகிறது
என்மனதை
படிக்கத்தெரியாத
உனக்கா
நிறையப்புத்தகங்கள் பரிசளித்தேன்

உன்
கூந்தல்
காற்றில்
அசைந்து எழுதும்
அற்புதமான
கவிதைகளை விடவும்
சிறப்பான கவிதைகளை
ஒரு பொழுதும்
என்னால் எழுதிவிட முடியாது

உனக்கு
பரிசுப்பொருளாகத்தர
என்னிடம் எதுவும் இல்லை ......
என் பரிசுத்த இதயத்தைதவிர

எந்தப்பெண்ணை
பார்த்தாலும்
அவர்களுக்கு
பின்னேயே செல்கிறது .......
என் கவிதை மனம்

வருங்காலத்தில்
என்ன ஆகப்போகிறாய்
ஆசையுடன் கேட்கிறேன்
நம் குழந்தைகளுக்கு
அம்மாவாகப் போகிறேன் என்று
வெட்கத்தோடு சொல்கிறாய்

No comments: