Monday, October 27, 2008

மாமதயானை காதல் கவிதைகள்

உன்
கண்களைப்பார்த்த
பிறகுதான்
என்
கண்களும் பேசும்
பாக்கியத்தை பெற்றன

நீ
மகிழ்ச்சியாக இருக்கிறாய்
எனினும்
உன் கூந்தலில்
வாடியப்பூக்களை
கண்ட பிறகு
எப்படிஎன்னால்
மகிழ்ச்சியாக இருக்கமுடியும்

எனக்கான காதல்
எந்தக்கண்களில்
பாதுகாக்கப்படுகிறது


சுக்கிரதிசை
அடித்ததாக
அனைவரிடமும்
பெருமையாக
சொல்லவேண்டும்
அதற்காகவாயினும்
ஒரே ஒருமுறை
என்னை
அடித்துவிட்டுச்செல்

பேசுகின்ற
உன்கண்களோடு
பேசுகையில்
நான்
பறந்துகொண்டிருக்கிறேன்
அழுகின்ற
உன் கண்களோடு
பேசுகையில்
நான்
இறந்துகொண்டிருக்கிறேன்
மாமதயானை
காதல் கவிதைகள்

No comments: