Saturday, September 6, 2008

காதல் கவிதைகள்-2

உனக்கு பின்னால்
ஒளிவட்டம்
எதுவும் தோன்றவில்லை
கையில் ஆயுதங்களும்
எதுவும் இல்லை
ஆபரணங்களின் ஆதிக்கமும்
உன் திருமேனியில் இல்லை
எனினும்
நீ என்
காதலின் கடவுள்


என்அருகிலேயே
நீ இருக்கிறாய்………
ஏழு கடலையும்
ஏழு மலையையும்
தாண்டி சொர்க்கம் இருப்பதாய்
தவறாய் கதை சொன்ன
தமிழ் ஐயாவை
என்ன சொல்வது.............